விரைவு வர்த்தக நிறுவனமான Zepto-வின் கல்லூரி வளாக வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பர சுவரொட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. X தளத்தில் பயனரால் பகிரப்பட்ட அந்த அறிவிப்பில், கணினி அறிவியல், BBA, BCA மற்றும் B. com படிக்கும் மாணவர்களுக்கு ‘பயிற்சியாளர் – மதர்ஹப் செயல்பாடுகள்’ என்ற 3 மாத பயிற்சி பணிக்கு ரூ. 20,000 உதவித்தொகையுடன் வாய்ப்பு அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வேலைவாய்ப்புக்கான தகுதிகளில் “ஆண் வேட்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்றும், “20 கிலோ வரை எடையைத் தூக்கவும், 10 முதல் 12 மணி நேரம் நின்று கொண்டே பணியாற்றக்கூடிய திறன் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. கணினி மற்றும் வணிகப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களிடம் தொழில்நுட்ப அறிவு சார்ந்த திறன்களை எதிர்பார்க்காமல், உடல் உழைப்பு சார்ந்த நிபந்தனைகளை விதித்ததும், பாலின பாகுபாடு காட்டியதும் இணையவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
“இனி இன்டர்ன்ஷிப் பெற ஜிம்மிற்குத் தான் செல்ல வேண்டும் போல இருக்கிறது” என்றும், “4 ஆண்டுகள் பட்டம் படித்துவிட்டு 12 மணி நேரம் 20 கிலோ தூக்குவது தான் வேலையா?” என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இணையத்தில் பரவி வரும் இந்த விளம்பர சுவரொட்டி உண்மையா அல்லது ஏதேனும் போலியாக உருவாக்கப்பட்டதா என்பதை Zepto நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ விளக்கமளிக்கவோ இல்லை.
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…