#image_title
இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா மூலம் பிரபலமான ஏராளமானோர் இருக்கின்றனர். யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பலர் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் ஹர்ஷா சாய் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ஹர்ஷா சாய் ஹைதராபாத்தை சேர்ந்தவர். இவருக்கு 26 வயது ஆகிறது. கல்லூரி படிப்பை முடித்த ஹர்ஷா சாய் யூடியூப் சேனலை தொடங்கினார். முதலில் ஹர்ஷா சாய் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பதிவிட்டதன் மூலமாக அவருக்கு சப்ஸ்க்ரைபர்ஸ் வர ஆரம்பித்தனர்.
இதனை அடுத்து 5 ரூபாய் நாணயங்களை கொடுத்து 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை ஹர்ஷா சாய் வாங்கினார். அதையும் வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவில் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு பேய் வீட்டில் தங்குவது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை ஹர்ஷா சாய் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். அவருக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்ஸ் குவிந்தனர். ஒரு கட்டத்தில் செலிபிரிட்டியாக மாறிய ஹர்ஷா சாய் யூட்யூபில் தனக்கு கிடைக்கும் வருமானம் மூலம் உதவி செய்ய ஆரம்பித்தார்.
இந்நிலையில் ஏழை குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுப்பது, ஏழை சிறுவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுப்பது, ஆயிரம் பேருக்கு பைக் டேங்க் ஃபுல் பெட்ரோல் போட்டு கொடுத்தது என ரசிகர்களை அடுத்தடுத்து ஈர்த்தார். இது மட்டும் இல்லாமல் ஒரு லட்சம் ஏழைகளுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ஹர்ஷா சாய் உணவு வாங்கி கொடுத்தார். மேலும் கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து இந்திய மாநிலங்களிலும் இருக்கும் சிறந்த ஹோட்டல்களில் இருந்து ஏழை மக்களுக்கு உணவை வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தார். இவருக்கு 3 யூடியூப் சேனல்கள் இருக்கிறது.
அதில் சுமார் 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இப்படி அனைவருக்கும் உதவி செய்து பிரபலமான ஹர்ஷா சாயின் சொத்து மதிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? தற்போது வந்த தகவலின் அடிப்படையில் ஹர்ஷா சாய்க்கு 20 முதல் 22 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு மாதம் ஹர்ஷா சாய் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…
குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், அக்டோபர் 24 அன்று 23 வயதான காஜல் என்ற பெண், அவரது முன்னாள்…
ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…