“நீங்க இன்னும் இளமையா இருக்கீங்க!” – ஆசை வார்த்தை கூறி 64 வயது முதியவரை வளைத்த பெண்… அந்தரங்க வீடியோ காட்டி மிரட்டி 70 லட்சத்தை உறிஞ்சிய கில்லாடி ஜோடி… அமராவதியை அதிரவைத்த ‘ஹனி ட்ராப்’…!!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், 64 வயது முதியவர் ஒருவரைத் தம்பதியினர் திட்டமிட்டு ஆசை வலையில் வீழ்த்தி, அவரிடமிருந்து சுமார் 70 லட்சம் ரூபாயைப் பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமராவதியில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு அந்த முதியவர் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது கடையின் உரிமையாளரான தம்பதியினருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதியவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, முதலில் அந்தப் பெண்ணின் கணவர் 10,000 ரூபாய் கடன் வாங்கி, அதனைச் சரியாகத் திருப்பிக் கொடுத்துள்ளார். இதன் மூலம் முதியவரின் நம்பிக்கையை அவர்கள் முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட பிறகு, கணவர் இல்லாத நேரங்களில் அந்தப் பெண் முதியவரிடம் நைசாகப் பேசிப் பழகியுள்ளார். “என் கணவர் என்னைச் சரியாகக் கவனிப்பதில்லை, நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள்” என ஆசை வார்த்தைகளைக் கூறி, முதியவரைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருவரும் தனிமையில் இருந்தபோது, அதனை அந்தப் பெண்ணின் கணவர் திட்டமிட்டு ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். இது அந்தத் தம்பதியினர் விரித்த ஒரு திட்டமிட்ட ‘ஹனி ட்ராப்’ வலையாகும்.

சிறிது காலம் கழித்து முதியவர் அந்த உறவிலிருந்து விலக முயன்றபோது, அந்தத் தம்பதி தங்களின் உண்மையான கொடூர முகத்தைக் காட்டியுள்ளனர். “எங்களிடம் உங்களது அந்தரங்க வீடியோக்கள் மற்றும் உரையாடல்கள் உள்ளன, அவற்றை உங்கள் குடும்பத்தினருக்கும் ஊருக்கும் அனுப்பிவிடுவோம்” என மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கினர். தனது கௌரவத்திற்குப் பயந்து அந்த முதியவர் கேட்கும் போதெல்லாம் பணத்தைக் கொடுத்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் (2020 – 2024), செக் மூலமாகவும், சுமார் 25 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் என மொத்தம் 70 லட்சம் ரூபாயை அந்தத் தம்பதி முதியவரிடமிருந்து உறிஞ்சியுள்ளனர்.

தொடர்ந்து கொடுக்கப்பட்ட நெருக்கடியாலும், பணத்தை இழந்த மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்ட முதியவர், இறுதியில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதியவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்தத் தம்பதியினரைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற ‘ஹனி ட்ராப்’ மோசடிகள் குறித்துப் பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி”… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு அதிரடி…!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

3 minutes ago

விஜய்யுடன் கூட்டணி… பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகி… தவெக கூட்டணியில் வெடித்தது பூகம்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து…

7 minutes ago

“என் வாழ்க்கையே வீணாகிடுச்சு”.. அந்த 3 பேர் செய்த முட்டாள்தனம்!”… கண்ணீர் மல்க உண்மையைச் சொன்ன மீரா வாசுதேவன்.. உருகும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் ‘உன்னை சரணடைந்தேன்’, ‘ஜெர்ரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும்…

8 minutes ago

‘புதிய சோபா’ எப்படி வந்துச்சுனு நான் சொல்லுறன்… திருமாவளவன் சொன்ன ‘ட்விஸ்ட்’ இதுதான்… அதிர்ந்த அரசியல் களம்…!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான விவாதங்களைக் கிளப்பிய 'புதிய சோபா' விவகாரத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…

11 minutes ago

“இது நடந்திருக்கக் கூடாது”… நேரலையில் உடைந்து அழுத ஆர்.ஜே. பாலாஜி…. வீடியோவை பார்த்து கலங்கிய ரசிகர்கள்…!

சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம் மே 14-ஆம் தேதியான இன்று உலகம்…

18 minutes ago

“விஜய் ஆட்சி அமைத்தது எங்க பிச்சையால தான்”…. அறிவாலயக் கூட்டத்தில் வெடித்த ஸ்டாலின்… அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்..!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை…

24 minutes ago