ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் உள்ள அரசு சிவில் மருத்துவமனையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயது இளம்பெண் கிரண் என்பவர், ஆக்ஸிஜன் வசதி கிடைக்காமல் பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், தனது மகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைக் கண்டு, ஆக்ஸிஜன் வழங்குமாறு அங்கிருந்த மருத்துவர்களிடம் 15 முதல் 20 முறைக்கு மேல் நேரில் சென்று கதறி அழுது முறையிட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவர்களும் அந்த அலறலைக் காதில் வாங்காமல் ஆக்ஸிஜன் வழங்குவதில் கடுமையான அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சரியான நேரத்திற்குச் சிகிச்சை கிடைக்காமல் அந்த இளம்பெண் மருத்துவமனை வார்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் உயிரைக் காப்பாற்றப் போராடிய தாயின் கதறல் பலனளிக்காமல் போனதை அடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பானிபட் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ரூ 80,000 மதிப்பிலான விசா மற்றும் வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் தொடர்புடைய 'பாபு' என்று…
வரதட்சணையாக தார் காரும் அதிக திறன் கொண்ட பைக்கும் கேட்டு, லூதியானாவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவியை நடுரோட்டில்…
நாசிக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த 'சிட்டிடிங்க்' பேருந்து, சாலையிலிருந்த…
கேரள மாநிலம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் என்ற நபர் பரிதாபமாக…
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…
நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…