திருப்பூர் மாவட்டத்தில் 23 வயது வாலிபர் திடீரென்று நெஞ்சு வழியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள திருமுருகன் பூண்டி விஜிவி கார்டன் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவருக்கு நவீன்குமார் (23) என்ற மகன் உள்ளார். கபடி வீரரான இவர் தனியார் பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் பணி முடிந்து அலுவலகத்திற்கு வெளியே தன்னுடைய வாகனத்தில் வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பைக் மீது சாய்ந்தபடி சில நொடிகளில் மயங்கி விழுந்தார்.
இவர் கீழே விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இவர் மாரடைப்பால் உயிரிழந்த காட்சியை சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அது தொடர்பான காட்சி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…