சம்பளம் பெறும் பிரிவினரின் முக்கிய நிதி ஆதாரமான வருங்கால வைப்பு நிதிக்கு, 2025-26 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாகத் தக்கவைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை பிஎஃப் கணக்கில் செலுத்த, நிறுவனமும் அதற்கு இணையான தொகையைச் செலுத்துகிறது பிஎஃப் வட்டி ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டாலும், அது ஒவ்வொரு மாதமும் உள்ள இருப்புத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, நிதியாண்டு முடிந்த பிறகு மொத்தமாக ஒரே நேரத்தில் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நிதி, முதலீடு மற்றும் தணிக்கைக் குழுவின் அறிக்கை மற்றும் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டத்திற்குப் பிறகு, நிதி அமைச்சகத்தின் ஒப்புதலோடு இறுதி செய்யப்படுகிறது.
சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு மற்றும் வட்டி விவரங்களை மிக எளிதாகச் சரிபார்க்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுப்பதன் மூலமாகவோ அல்லது ‘EPFOHO UAN ENG’ என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலமாகவோ தகவல்களை உடனுக்குடன் பெறலாம். இதுதவிர, அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்திற்குச் சென்று தங்களின் UAN எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைவதன் மூலமும், ஸ்மார்ட்போன் பயனர்கள் ‘UMANG’ செயலியைப் பதிவிறக்கம் செய்து EPFO பகுதிக்குச் செல்வதன் மூலமும் தங்களின் பாஸ்புக் இருப்பு மற்றும் கோரிக்கை நிலையை எளிதாகச் சரிபார்க்க முடியும்.
சமீபத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பணம் எடுப்பதற்கான விதிகளைப் பெருமளவில் தளர்த்தியுள்ளது. முன்னிருந்த 13 வெவ்வேறு பகுதி பணம் எடுக்கும் விதிகள் நீக்கப்பட்டு, தற்போது நோய்/கல்வி/திருமணம், வீட்டு வசதித் தேவைகள், அவசரத் தேவை ஆகிய மூன்று பிரிவுகள் மட்டுமே நடைமுறையில் வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கிய மாற்றமாக, இந்த மூன்று பிரிவுகளின் கீழ் பணம் எடுப்பதற்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஎஃப் சந்தாதாரர்கள் அவசரக் காலங்களில் தங்கள் கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இருவரின் பங்களிப்புத் தொகையையும் 100 சதவீதம் முழுமையாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சாம்புல்காட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல ஆசிரமப் பள்ளியில் , 'ஒழுக்கம்' மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரின் பிரம்மபுரி பகுதியில், முஸ்கான் என்ற 22 வயது இளம்பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக…
சககார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடைபெற்ற உடற்பயிற்சி நிலையத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்ற 25 வயதான நந்தன்…
உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள சஹஸ்ரதாரா சாலையில் அமைந்துள்ள குஜ்ராரா இன்டர் கல்லூரி வாசலில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட…
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓங்கப்பாடி தாங்கல் கிராமத்தில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.…
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், 42 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 27 வயதுடைய இளைஞரும் மர்மமான…