Categories: சினிமா

யோகி பாபுவுக்கே விபூதி அடிக்க பார்த்த ஏஜென்ட் டீனா… ‘அநியாயம் புடிச்சவங்களா இருக்கீங்களே’ கலாய்த்த யோகி பாபு… வைரல் வீடியோ…!

Spread the love

தமிழ் திரைப்படங்களில் உதவி நடன இயக்குனராக பணியாற்றி பிரபலமானவர் நடிகை வசந்தி. நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட வசந்தி நடன கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி அவரது திறமையால் பல நடன இயக்குனர்களுடன் உதவி நடன இயக்குனராக பணியாற்றினார். நயன்தாரா, விஜய் , அஜித் என டாப் ஹீரோக்களுக்கு கோரியோகிராப்  செய்துள்ளார். தமிழ் ,தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் வசந்தி. நடிகர் விஜய் நடித்த பகவதி படத்தில் அல்லு அல்லு பாடலிலும், அஜித் நடித்த வில்லன் படத்தில் ‘அடிச்சா நெத்தியடி’ பாடலிலும் நடனமாடியிருப்பார்.

 

உதவி நடன இயக்குனராக பணியாற்றியவர் வசந்தி. அண்மையில் வெளியான வலிமை படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாதிரி பாடலுக்கு பணியாற்றியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் அவர் தற்பொழுது நடன இயக்குனர் தினேஷுடன் பணியாற்றி வருகிறார். விக்ரம் படத்தின் மூலம் தற்பொழுது நடிகையாகவும் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை  ஏற்படுத்தியது.

வசந்தி விக்ரம் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ஏஜென்டினா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. இத்திரைப்படத்தில் இவர் வரும் காட்சிகள் வெறும் 4 நிமிடங்கள் என்றாலும் அந்த ஆக்சன் காட்சியால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார் வசந்தி.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஏஜென்டினா. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் யோகி பாபுவுடன் போட்டோ எடுப்பது போல சென்று வீடியோ எடுத்துள்ளார். இதைக்கவனித்த நடிகர் யோகிபாபு ‘அநியாயம் புடிச்சவங்களா இருக்கீங்களே’ என்று கலாய்த்துள்ளார். இந்த விடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

10 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

11 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago