தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார். தற்போது இவர் இல்லாத படங்களை இல்லை என்று அளவிற்கு பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படி காமெடியனாக கலக்கி வரும் யோகி பாபு தற்போது சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது கதாசிரியராக மாறி இருக்கின்றார். தமிழ் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.
இந்த படத்திற்கான போஸ்டரை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் யோகி பாபு முதன்முதலாக நீங்கள் தயாரிப்பாளராக இறங்கி இருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படம் தனக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். அடுத்ததாக நீங்களும் நானும் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
அந்த படத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து யோகி பாபு தற்போது கதாசிரியராக மாறி இருக்கும் செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் இதற்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…