அடேங்கப்பா!… ஒரே நாளில் இவ்வளவு கோடி லாபமா?… போர் பதற்றத்திலும் கல்லா கட்டும் ஈரான்… ஆசிய நாடுகளுக்கு விழுந்த பலத்த அடி…!

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கைகள் ஈரானுக்குப் பாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஈரானுக்குச் சாதகமாகவும், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது. இந்தியா போன்ற ஒரு சில நாடுகளுக்கு மட்டும் ஈரான் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தாலும், உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் இந்தியாவும் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஈரான், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் $100-ஐத் தாண்டியுள்ள நிலையில், பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது.

ஈரானின் எண்ணெய் வருமானம் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு $115 மில்லியனாக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் அது $139 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ஒரு நாளைக்கு சுமார் 1,155 கோடி ரூபாய்க்கும் அதிகம் (தற்போதைய நிலவரப்படி சுமார் 1310 கோடி ரூபாய்). சீனா போன்ற தனது நட்பு நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விற்பனையில் பேரலுக்கு வெறும் $2.10 மட்டுமே தள்ளுபடி வழங்கி, ஈரான் தனது கஜானாவை நிரப்பி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தினாலும், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படாத வகையில் தாக்குதல்கள் அமைந்திருப்பது ஈரானுக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

மறுபுறம், எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேறு வழியின்றி, கடலில் உள்ள டேங்கர்களில் முடங்கிக் கிடக்கும் ஈரானிய எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சர்வதேச அரசியல் நிபுணர்கள், “ஈரானிடம் எண்ணெய் விற்கச் சொல்லி அமெரிக்கா கெஞ்சுவது போல் உள்ளது” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஈரானின் முக்கிய ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அதன் எண்ணெய் ஏற்றுமதி தடையின்றித் தொடர்வது அமெரிக்காவின் இயலாமையைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்திப் பிரச்சனையால் ஈராக், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகள் போர் பயம் மற்றும் போக்குவரத்துச் சிக்கல் காரணமாக உற்பத்தியைக் குறைத்துள்ளன. அத்துடன் எண்ணெயை அனுப்ப மாற்று வழிகளைத் தேடி அலைகின்றன. ஆனால், ஈரான் மட்டும் எவ்வித தடையுமின்றி ஜலசந்தி வழியாகவும், அதற்கு வெளியேயும் தனது கப்பல்களை அனுப்பித் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. வளைகுடா நாடுகள் முடங்கிக் கிடக்கும் இந்தச் சூழல், ஈரானைப் பொருளாதார ரீதியாக மேலும் வலுப்படுத்தியுள்ளது ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.

Muthu Mani

Recent Posts

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

5 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

10 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

14 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

46 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

57 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

1 மணத்தியாலம் ago