வரலட்சுமி நோன்பு என்பது இந்து முறைப்படி மகாலட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும். இந்த நாளில் பெண்கள் அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் விரதம் இருந்து வீட்டில் பூஜை செய்வார்கள். அப்படி செய்தால் கணவனின் ஆயுள் நீடிக்கும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் செல்வம் செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியை பெருகும் என நம்பப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நிலையில் பௌர்ணமியும் சேர்ந்து வருவதால் இந்த வருடம் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் பூஜையில் ஈடுபட போகக்கூடிய பெண்கள் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அதாவது வரலட்சுமி விரதம் அன்று வீட்டில் கட்டாயம் நகம் வெட்டக்கூடாது.
நகம் கடிப்பதையும் தவிர்க்க வேண்டும். வரலட்சுமி பூஜை என்ற பெண்கள் கட்டாயம் வீட்டில் பேன் வார கூடாது. யாருக்கும் பேன் பார்க்கவும் கூடாது. இந்த நாளில் பெண்கள் மறக்காமல் கையில் கண்ணாடி வளையல் தான் அணிய வேண்டும். தங்க வளையல் அணிந்திருந்தாலும் இரண்டு கண்ணாடி வளையலை அணிந்து கொள்ளலாம். வரலட்சுமி விரதம் மாலில் பெண்கள் கட்டாயம் கருப்பு நிறத்தை தவிர்க்க வேண்டும்.
இந்த நாளில் முடி வெட்டுவதையும் தவிர்க்க வேண்டும். என்னை வைத்து தலைக்கு குளிக்க கூடாது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பெண்கள் பூஜை செய்யக்கூடாது. மனதில் சஞ்சலத்துடன் பூஜை செய்யக்கூடாது. இரவல் அல்லது கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கசப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பாயாசம் வீட்டில் கண்டிப்பாக செய்ய வேண்டும். அம்மனின் உடைகள் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கக் கூடாது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…