தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு, திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் பேச்சுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், பெண்கள் பாதிக்கப்படும்போது முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதில்லை எனக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, திமுக நிர்வாகிகள் பெண்களை அவதூறாகப் பேசும்போது பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, மீண்டும் அவர்களைக் கட்சியில் சேர்த்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் ‘போக்சோ’ வழக்குகள் 125 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட குஷ்பு, பாதுகாப்பு இல்லாத சூழலில் முதல்வரை எப்படி ‘தந்தை’ என்று அழைக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்குப் ‘பிரதம மந்திரி’ என்று பொதுவாகப் பெயரிடப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அரசுத் திட்டங்களுக்குத் தன் தந்தையின் பெயரையே சூட்டி வருவதாக அவர் விமர்சித்தார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது மட்டுமே முன்னேற்றமாகிவிடாது என்றும், பெண்கள் சுயச்சார்புடன் சொந்தக் காலில் நிற்பதே உண்மையான வளர்ச்சி என்றும் அவர் தெரிவித்தார். தன் அண்ணனை (ஸ்டாலின்) தட்டிக் கேட்க கனிமொழி எம்.பி-க்குத் துணிவில்லை என்று சாடிய குஷ்பு, தொகுதி மறுவரையறை போன்ற விவகாரங்களில் முதல்வருக்குப் போதிய புரிதல் இல்லை என்றும் தனது பேட்டியில் காட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…