இதெல்லாம் ஒரு பொழப்பா..? “10,000 ரூபாய் உள்ளாடைகள் மாயம்” கௌரவமான பதவியில் இருக்கும் பெண் செய்த காரியம்… துணிக்கடையில் நடந்த பகீர் திருட்டின் சிசிடிவி வீடியோ..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு துணிக்கடையில், பெண்கள் அமைப்பின் தலைவியே தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான உள்ளாடைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியின் லஹுராபிர் பகுதியில் உள்ள ஒரு கடையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. கடை உரிமையாளர் சரக்குகளைச் சரிபார்த்தபோது பற்றாக்குறை இருந்ததைக் கண்டு சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண், வாரணாசி மகிளா வியாபார் மண்டலின் (Varanasi Mahila Vyapar Mandal) தலைவரான சுனிதா சோனி என்பது தெரியவந்துள்ளது. இவர் வாரணாசி மாநகராட்சியின் முன்னாள் விளம்பரத் தூதராகவும் இருந்துள்ளார். சிசிடிவி காட்சிகளில், சுனிதா சோனி விற்பனையாளரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவருடன் வந்த அவரது மகளும் மற்றும் ஒரு பெண்ணும் நைசாக கடையில் இருந்த உள்ளாடைகளைத் தங்கள் பைகளுக்குள் திணிப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அவர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் புகாரை மறுத்துள்ள சுனிதா சோனி, தான் அந்தத் திருட்டில் ஈடுபடவில்லை என்றும், அங்கிருந்த பெண்களின் செயல்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், சமூகத்தில் கௌரவமான நிலையில் இருக்கும் ஒருவரே இத்தகைய சிறுபிள்ளைத்தனமான திருட்டில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago