உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள கிராமத்தில் மிகவும் வசதி படைத்த விவசாயி ஒருவரின் 25 வயது ஒரே மகள் அங்குள்ள தொழில் மேம்பாட்டு வாரியத்தின் தொழில் பிரிவில் பொறியாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்ட நிலையில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. நவம்பர் 29ஆம் தேதி மணமகள் தன் வீட்டில் இருந்து மணமகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி மணப்பெண்ணின் தந்தை தனது மகளைக் காண மணமகனின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது புது பெண் தன்னுடைய தந்தையை அழைத்து தனியாக பேசினார். மணமகன் மருத்துவர் ரீதியாக திருமண உறவுகளுக்கு தகுதியற்றவர் என்றும் நம்மை மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றி விட்டனர் என்றும் கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகளின் தந்தை தனது பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் கூட சொல்லாமல் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினரும் சந்தித்து பேசிய நிலையில் அங்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர் மாப்பிள்ளை குடும்பத்தினரிடம் பல விஷயங்களை தங்களிடம் மறைத்ததாக குற்றம் சாட்டினர்.
மேலும் மணமகனுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதையும் மறைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மணமகன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவர் ரீதியாக திருமண உறவுகளுக்கு தகுதியில்லாதவர் என நிரூபிக்கப்பட்டது. இந்த மருத்துவ முடிவுகளை மணமகனின் தந்தை ஆரம்பத்தில் ஏற்க மறுத்துவிட்டார். பிறகு காவல் நிலையம் சென்ற இந்த பிரச்சனை சமரசம் செய்யப்பட்டது.
திருமண செலவுகளுக்காக மணமகன் குடும்பத்தினர் செலவழித்த ஏழு லட்சம் ரூபாய் பணம் மற்றும் அனைத்து பரிசு பொருட்களையும் திருப்பித் தர வேண்டும் என மனமகள் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் திருமணம் ஆன மூன்று நாட்களிலேயே இந்த திருமண உறவு முடிவுக்கு வந்தது. பல கனவுகளுடன் முதல் இரவு அறையில் நுழைந்த இளம் பெண்ணுக்கு கணவன் கூறிய ரகசியம் இடியாய் இறங்கியது. நான் ஆண்மையற்றவன், என்னால் உறவில் ஈடுபட முடியாது என கணவன் சொல்ல அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மூன்றே நாள்களில் விவாகரத்து பெற்றுவிட்டார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…