கரூர் சம்பவத்தில் நிலவும் மர்மங்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். திருச்சியிலிருந்து கரூர் செல்வதற்கு ஏன் இவ்வளவு தாமதமானது என்றும், இடையில் ஒரு மணி நேரம் வாகனம் எங்கே நின்றது என்றும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.
சாலை வளைவுகள் அதிகமாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டதாக விஜய் அளித்த பதிலை ஏற்காத அதிகாரிகள், செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகளைச் ஆதாரமாகக் காட்டி அவரை திணறடித்தனர். இதன் காரணமாக, ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டவர் தற்போது சந்தேகத்திற்குரிய நபராகக் கருதப்படும் நிலை உருவாகியுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தும் பாதுகாப்பு விதிகளை மீறி வாகனத்தை ஏன் உள்ளே கொண்டு சென்றீர்கள் என்றும், ஆம்புலன்ஸ் வரும்போது கூட பேச்சை நிறுத்தாதது ஏன் என்றும் சிபிஐ தரப்பில் வினாக்கள் எழுப்பப்பட்டன.
காவல்துறையினர் சரியாகக் கூட்டத்தைக் கையாளவில்லை என்று விஜய் குற்றம் சாட்டினாலும், முறையான அனுமதி இன்றி நிகழ்ந்த செயல்பாடுகளே இந்தத் துயரத்திற்குப் பின்னணி என்று அதிகாரிகள் கருதுகின்றனர். போதிய ஆதாரங்கள் மற்றும் முரண்பட்ட பதில்கள் காரணமாக, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…