ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தைத் தணிக்க எகிப்து தற்போது ஒரு முக்கியமான அமைதித் தூதுவராகக் களம் இறங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலைச் சீர்செய்ய எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி தலைமையிலான அரசு, ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஓமன் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ஏற்கனவே சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் எகிப்தின் மீது அதிக நம்பிக்கை இருப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா போர்நிறுத்தத்திற்குத் தயாராக இருந்தாலும், ஈரான் தனது பாதுகாப்பு மற்றும் இழப்பீடு தொடர்பான ஆறு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
மேலும் ஈரானின் நிபந்தனைகளில் முக்கியமாக, எதிர்காலத்தில் அமெரிக்கா மீண்டும் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தாது என்பதற்கான உத்தரவாதம் மற்றும் கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், தங்களுக்கு எதிராகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஈரான் முன்வைத்துள்ளது.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் தயக்கம் காட்டி வரும் நிலையில், வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த முட்டுக்கட்டையை உடைக்க எகிப்து தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் மட்டுமே மத்திய கிழக்கில் மீண்டும் நிலைப்புத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…