பெங்களூரு மைசூர் வீதியில் உள்ள அஞ்சேபாளையா பகுதியில், திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட நாகராஜ் (60) என்ற முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். காலை 5.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இறந்தார். கக்கலிபுரா வனச்சரகத்திற்குட்பட்ட இப் பகுதிக்கு, அருகில் உள்ள பன்னேர்கட்டா வனப்பகுதியிலிருந்து யானை வந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளில் அதிகாலை 5.11 மணியளவில் யானை ஒன்று வேகமாகச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், அப்பகுதியில் இரு காம்பவுண்ட் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு, யானை நாகராஜைத் தாக்கியதை காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் யானையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், உள்ளூர்வாசிகளிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.
https://twitter.com/HateDetectors/status/2104539706889584891/video/1
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வனத்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து உயிரிழந்த நாகராஜின் குடும்பத்தினரும் கிராம மக்களும் ஆர்.ஆர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு மகள்களைக் கொண்ட அவரது குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வனத்துறை அமைச்சர் நேரில் வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கும்பல்கோடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…