கர்நாடக மாநிலம் விஜயபுராவில், காலை நடைப்பயிற்சி சென்ற கணவரைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து எஸ்யூவி காரால் மோதிக் கொன்று, அதைச் சாலை விபத்து என நாடகமாட முயன்ற மனைவியின் கொடூரக் சதித்திட்டம் காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஏகதா நகரைச் சேர்ந்த ராஜசேகர் பிராதர் (42) என்பவர் கடந்த அக்டோபர் 4-ம் தேதி காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, அடையாளம் தெரியாத கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை சாதாரண விபத்து வழக்கு என அவரது மனைவி அஸ்வினி காவல்துறையில் புகாரளித்த நிலையில், சந்தேகமடைந்த போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
தம்பதியரின் வீட்டின் பெயிண்டராக வந்த ஆனந்த் என்பவருடன் அஸ்வினிக்குக் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஒன்றாக வாழ ஆசைப்பட்ட இருவரும், கூலிப்படை மற்றும் ஒரு சிறுவனின் உதவியோடு ராஜசேகரை காரால் மோதிக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டு, மனைவி அஸ்வினி, கள்ளக்காதலன் ஆனந்த் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…