கர்நாடக மாநிலம் பெலசாளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சந்தீப். தனது பெயரில் 2 கோடி ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்திருந்தார். அவர் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவி சுமாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த டோம்பர் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 5-ஆம் தேதி சந்தீப் ஒரு விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, கணவரைக் கொலை செய்துவிட்டு 2 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெற சுமாவும் அவரது கள்ளக்காதலனும் கொடூரத் திட்டம் தீட்டினர். அதன்படி, மார்ச் 15-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்தீப்பிற்கு ஊசி மூலம் விஷத்தைச் செலுத்திப் படுகொலை செய்தனர். பின்னர், சிகிச்சை பலனின்றி கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடி, உறவினர்களை நம்ப வைத்து இறுதிச் சடங்குகளையும் முடித்தனர்.
அதன்பின், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகப் போலி ஆவணங்களைத் தயாரித்து சுமா விண்ணப்பித்துள்ளார். இந்தத் தகவல் சந்தீப்பின் சகோதரிக்குத் தெரியவரவே, தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சுமாவைத் தனிப்படை அமைத்துப் பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். போலிசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றதை சுமா ஒப்புக்கொண்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக் குற்றவாளிகளான சுமா, அவரது கள்ளக்காதலன் டோம்பர் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவியவர்கள் என மொத்தம் 9 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…