தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒரு பக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. வழக்கம்போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது.
இதனிடையே விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதிலிருந்து தொடர்ந்து ஆளும் திமுக ஆட்சியை தான் விமர்சித்து வருகின்றார் . மத்திய பாஜக அரசையும் விமர்சித்து வரும் விஜய் ஒருபோதும் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்ற திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால் இதுவரை விஜய் அதிமுக குறித்து எந்த இடத்திலும் விமர்சிக்கவில்லை.
இப்படியான நிலையில் அதிமுக தொண்டர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் எப்போதோ இணைந்து விட்டதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்ட நிலையில் தற்போது பின்புறம் வழியாக பாஜகவை அதிமுக கூட்டணிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலை உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் அதிமுக தலைமை வலுவிழந்து விட்டதால் அக்கட்சியை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…