இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் கண் கலங்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை குவித்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் காமெடி நடிகர் சுகமாரின் நடிப்பு நல்ல வரவேற்பு பெற்றது.
மதுரையை சேர்ந்த சுகுமார் காதல் படத்தை தவிர வேறு சில படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் .ஆனால் காமெடி நடிகராக தான் நினைத்த இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. சமீபத்தில் இவர் தனது திரை அனுபவங்களை பற்றியும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
‘சினிமாவில் ஒரு பக்கம் வடிவேலு டீம் , மற்றொரு பக்கம் விவேக் டீம் . இந்த பக்கமும் போக முடியாது. அந்த பக்கமும் போக முடியாது. அவங்க ரெண்டு பேரும் என்னை வாழ விடவே இல்லை. நடிகர்களும் சில நேரம் அரசியல்வாதி போலவே நடந்திருக்கிறார்கள். நடிகர்களுக்கே இந்த நிலைமைனா நடிகைகளை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவங்க எல்லாத்துக்குமே அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் ஆகணும்’ என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
நடிகர் காதல் சுகுமாரை நமக்கு நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு சில படங்களை இயக்குனராக இயக்கியும் உள்ளார். இது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆம் இவர் இயக்குனராக மாறி சும்மாவே ஆடுவோம், திருட்டு விசிடி போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இத்திரைப்படங்களின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார் நடிகர் காதல் சுகுமார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…