அடப்பாவி மனுஷா, கணவனின் கன்னத்தில் பளார் விட்ட மனைவி… பொதுக் கூட்டத்தில் ஆடிப் போன மந்திரி.. பரபரப்பு சம்பவம்…!

Spread the love

பெலக்காவி மாவட்டத்திலுள்ள மதினஹல்லி கிராமத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று முன்தினம் கூட்டுறவு வங்கிக்கான தலைவர் தேர்தல் நடந்தது. இதில் முதன்மை வேளாண்மை கடன் சங்கத்தில் ஒருவர் போட்டியிட்டார். அதற்காக சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்தச் சங்கத்தை சேர்ந்த மாருதி என்பவர் சில வாரங்களாகவே மாயமாகி இருந்த நிலையில் திடீரென்று கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டார். சதீஷ் ஜார்கிகோளி மந்திரியும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு மாருதியின் மனைவி திடீரென்று கூட்டத்திற்கு வந்து மாருதியின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். ஒரு வாரமாக எங்கே சென்றாய் என்று கேட்டு கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார் . இது போன்ற விஷயம் நடந்த போது என்ன பண்ணுவது என்று அறியாமல் திகைத்து நின்றிருந்தார் மந்திரி.  அங்கிருந்த சிலர் கணவன் மனைவியை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய முன்னாள் எம்பி ரமேஷ் கத்தி, மந்திரியிடம் சவால் விட்டார். இந்த நொடியில் இருந்து அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறேன் என்றும் அதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என்று கூறிவிட்டு போலீஸிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து மந்திரி அவர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டுறவு வங்கிக்குள் நுழைந்தார். முன்னாள் எம்பி ரமேஷ் கத்தி அவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அங்கிருந்து போலீசார் இருதரப்பினரையும்  சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்து விட்டனர். மாருதி அவர்களை யாரோ கடத்திச் சென்றதாக போலீசாரிடம் வழக்கு பதிவு செய்யக்கோரி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் பெலக்காவியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Divyamayakannan

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

3 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

3 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago