#image_title
தமிழ் சினிமா மறக்க முடியாத நாயகன் MGR. புரட்சித்தலைவர் மகா நடிகன் என்று அழைக்கப்படுபவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் MGR. தமிழக மக்கள் மீது அவ்வளவு அன்பும் கரிசனையும் கொண்டிருந்தவர் MGR.
வறுமையின் காரணமாக நாடகத்தில் நடிக்க வந்த MGR பின்னர் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்து போராடி படிப்படியாக நடிகராக உயர்ந்தவர். நடிகராக தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களின் மனதை கவர்ந்தார் MGR. இவரது படங்கள் என்றாலே அது ஹிட் தான். இவரது படங்களில் பெரும்பாலும் சமூக நீதி கருத்துக்கள் இருக்கும். சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை எடுத்து கூறுவதாக இருக்கும். திராவிட சிந்தனைகள் இருக்கும். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். இது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
எம்ஜிஆர் உடன் நடிக்கவே அனைத்து நடிகைகளும் இவருடன் படம் பண்ண வேண்டும் என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருவர். எம்ஜிஆர் உடன் 26 படங்களுக்கும் மேலாக நடித்தவர் சரோஜாதேவி. ஒரு காலத்தில் எம்ஜிஆர் இருக்கும் சரோஜாதேவிக்கும் மோதல் ஏற்பட்டு இருவரும் அதன் பிறகு ஒன்றாக நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது. அதற்கு காரணம் என்ன என்பதை இனி காண்போம்.
இது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் MGR. ஒருமுறை நடிகர் எம் ஆர் ராதாவுக்கும் எம்ஜிஆர்க்கும் பிரச்சனை ஏற்படவே எம் ஆர் ராதா MGR வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் அவரது தொண்டையில் சுட்டுவிட்டார். இதனால் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் இருந்தார் எம்ஜிஆர்.
அப்போது MGR மருத்துவமனையில் இருக்கும்போது அவருடன் நடிப்பதற்கு சரோஜாதேவி ஒப்பந்தமாகி இருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் சரோஜாதேவிகளின் அம்மாவிடம் எம்ஜிஆர் இப்படி இருக்கிறாரே எப்படி இனி சரோஜாதேவி நடிப்பாரா என்று கேட்டதற்கு அவர் பூரண குணமடைந்து வரட்டும் அதற்கு பிறகு பார்த்துக் கொள்வோம் என்று அவரது தாயார் கூறியிருப்பார். ஆனால் சரோஜா தேவியோ எனக்கு எம்ஜிஆர் ஐவிடவும் சிவாஜி கணேசன் அவர்களுடன் தான் நடிப்பது பிடித்து இருக்கிறது என்னுடைய திறமையை அங்க தான் காட்ட முடிகிறது இங்கு என்னால் சரியாக வேலை செய்ய முடியவில்லை என்று கூறி இருக்கிறார் சரோஜாதேவி.
இதை பார்த்த தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் கோபப்பட்டு அதற்கு பிறகு சரோஜாதேவி MGR உடன் ஒப்பந்தமாக இருந்த படங்களில் எல்லாம் சரோஜாதேவியை தூக்க செய்து ஜெயலலிதாவை MGR உடன் இணைந்து நடிக்க வைத்தார். முதலில் MGR -சரோஜாதேவி ஜோடி தமிழகத்தில் பிரபலமாக இருந்தது ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகு MGR- ஜெயலலிதா ஜோடி மிகப் பிரபலம் அடைந்தது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…