Categories: சினிமா

மகனுக்காக நன்றி மறந்த விக்ரம்.. இயக்குனர் பாலா உடன் சீயானுக்கு அப்படி என்னதான் பிரச்சனை..?

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாலா கடந்த 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படம் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு முன்பு 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் விக்ரம் நடித்திருந்தாலும் சேது திரைப்படம் தான் சினிமாவில் அவருக்கென்று தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தில் சீயான் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் பின்னாளில் சீயான் விக்ரம் என்ற பெயரும் விக்கிரமுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து பிதாமகன் என்ற திரைப்படத்தை பாலா இயக்கியிருந்தார். அந்தத் திரைப்படமும் விக்ரமின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக தான் இருந்தது. விக்ரம் தன்னுடைய கேரியரில் தேசிய விருது வென்ற ஒரே ஒரு திரைப்படம் பிதாமகன் படம் தான்.

இப்படி விக்ரம் என்ற நடிப்பு அரக்கனை வெளியில் கொண்டு வந்த பெருமை முழுக்க முழுக்க இயக்குனர் பாலாவுக்கு தான் சேரும். பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை. இருந்தாலும் பாலா மீது மிகுந்த பாசம் வைத்திருந்த விக்ரம் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவு எடுத்தபோது அவரும் தன்னைப்போல் பாலா இயக்கத்தில் தான் ஹீரோவாக வேண்டும் என்று முடிவு செய்தார். இங்குதான் இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனையை ஆரம்பித்தது என்று கூற வேண்டும். அதாவது பாலாவின் படங்கள் அனைத்துமே மற்ற கதைகளம் போல் இல்லாமல் வித்தியாசமானதாக தான் இருக்கும்.

காதல் கலந்த படங்களும் ஒரு முரட்டுத்தனம் கலந்த மனதை தொடும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும். இப்படி வித்தியாசமான படைப்புகளை வழங்கக்கூடிய பாலாவிடம் சென்று விக்ரம் தன்னுடைய மகனை வைத்து தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். முதலில் தயங்கிய பாலா விக்ரம் கேட்டதற்காக அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா என்ற படத்தை எடுக்க ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து விக்ரம் தன்னுடைய மகனை பாலாவிடம் ஒப்படைத்து விட்டு வர்மா படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு ஒரு நாள் அந்த படத்தை தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார்.

படம் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் கடுப்பான விக்ரம் படத்தை வெளியிட முடிவை கைவிட்டு படத்தை அப்படியே ட்ராப் செய்தார். இப்படி கோபத்தில் செய்த விக்ரம் வர்மா படத்தை பாலா எடுக்கும் போது ஒரு முறை கூட சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று பார்க்கவில்லை. படம் முடித்து பிரிவியூ பார்க்கும்போது மட்டும் குறை கூறிவிட்டு படத்தை ட்ராப் செய்துள்ளார். இதனால் பாதியிலேயே கிளம்பி போன விக்ரமுக்கு போன் போட்ட பாலா இப்படி செய்து என்னை அசிங்கப்படுத்திரியா என்று கேட்கும் சண்டை போட்டுள்ளார்.

அதன் பிறகு விக்ரம் இதே கதையை வைத்து மற்றொரு இயக்குனரை வைத்து தனது மகனுக்காக படத்தை எடுத்து முடித்தார். இதில் முழுக்க முழுக்க தவறு விக்ரம் பக்கம் தான் உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திற்குப் பிறகு விக்ரம் மற்றும் பாலா இருவரும் பேசிக் கொள்வதில்லை. விக்ரம் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அடையாளம் கொடுத்தது சேது திரைப்படம் தான். அப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்த பாலாவுக்கு 25 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாடிய போது அதில் சூர்யா உட்பட நடிகர்கள் பலரும் கலந்து கொண்ட சமயத்தில் விக்ரம் கலந்து கொள்ளாதது பலருக்கும் கோபமாக தான் இருந்தது. இதனைப் பார்த்த பலரும் விக்ரம் இப்படி நன்றி மறக்கலாமா என்றும் கேட்டு வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

40 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

41 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

54 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

2 மணத்தியாலங்கள் ago