அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, இரண்டு மாதங்களைக்கூட முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது “ஊழலற்ற, லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவோம்” என்று முழங்கிய முதல்வர் விஜய், பதவியேற்ற பின்னரும் “மக்கள் பணத்தை தொட மாட்டேன், தொட்டவர்களை விடமாட்டேன்” என்று அதிரடியாகப் பேசியிருந்தார். ஆனால், அவரது அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள் அண்டர்டேபிள் டீலிங்கில் இறங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் புகார்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தை உலுக்கியுள்ளன.
தற்போது அமைந்துள்ள தவெக அமைச்சரவையில், மூத்த அமைச்சரான செங்கோட்டையனைத் தவிர மற்ற அனைவரும் பெரும்பாலும் புதுமுகங்கள் மற்றும் எளிய பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனால் ஒரு தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் கிடைக்கும் என்று பொதுமக்கள் நம்பினர். அமைச்சர்களின் செயல்பாடுகள் தற்போதைக்குச் திருப்திகரமாகவே இருந்தாலும், அவர்களுக்குப் பக்கபலமாக நியமிக்கப்பட்ட சில பிஏக்களின் அத்துமீறிய செயல்பாடுகள் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் நற்பெயருக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.
குறிப்பாக, இந்த உதவியாளர்கள் சிலர் அமைச்சர்களிடம் சென்று, “எதிர்காலப் பொருளாதாரச் சூழல் மற்றும் அரசியல் தேவைகளைக் கருதி இப்போதே நிதியைத் திரட்டி வைத்துக் கொள்வது நல்லது” என்று தூபம் போட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. “அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம், அதற்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்; மேலும் விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தல் செலவுகளுக்கு மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும்” என்று கூறி, அமைச்சர்களை மனதளவில் மாற்றி நிர்வாக முடிவுகளில் பணப்பரிவர்த்தனைகளைத் தூண்டி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விளைவாக, பணியிட மாற்றங்கள், அரசுப் பதவி உயர்வுகள் மற்றும் புதிய காண்ட்ராக்ட் ஒதுக்கீடுகள் போன்ற முக்கியப் பிரிவுகளில் சில பிஏக்கள் தங்களின் வசூல் வேட்டையை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. முதல்வர் விஜய்க்குத் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர்கள் தயக்கம் காட்டினாலும், “எந்த வழியில் செயல்பட்டால் மாட்டிக்கொள்ளாமல் பணம் வரும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறி இந்த உதவியாளர்கள் அதிகாரிகளை மிரட்டி காரியம் சாதித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாத தமிழக வெற்றிக் கழகத் தலைமை, தலைமைச் செயலகத்தில் பிஏக்கள் என்ற பெயரில் கல்லா கட்டும் நபர்களைக் கண்காணிக்கத் தனது ‘ராடாரை’ பறக்கவிட்டுள்ளது. இத்தகைய முறைகேடுகளைக் கண்காணிக்கத் தவெக தரப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், மூத்த அமைச்சர்கள் இதற்காகத் தனி டீம் அமைத்து ரகசியமாகக் கண்காணித்து வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தவெக தரப்போ, “ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திமுக திட்டமிட்டுப் பரப்பும் பொய்க் குற்றச்சாட்டு இது” என்று இந்தத் தகவலை அடியோடு மறுத்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது 64 வயது தாயாரை, பேராசிரியர் ஒருவர்…
பாஜகவுடன் தவெக மறைமுகக் கூட்டணி வைத்து இருப்பதாக திமுக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதற்கு தவெக அமைச்சர்கள்…
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா ரூடகி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பசப்பா (27). இவருக்கு அக்சதா என்பவருடன்…
சென்னை எழும்பூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு…
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர…