யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. தவெக – பாஜக கூட்டணி?…. உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல் குமார்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின்  கொள்கை நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தங்களின் ‘கொள்கை எதிரி’ என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அவர்களுடன் ஒருபோதும் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கட்சி தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்தே தவெக எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து ஒருநாளும் பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சமீபகாலமாக ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு தொடர்பான சிக்கல்கள் மற்றும் கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை போன்ற நெருக்கடிகள் தவெக தலைமையைச் சூழ்ந்துள்ளன. நடிகர் விஜய் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தவெகவை பாஜக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, என்டிஏ கூட்டணியில் தவெகவை இணைக்கப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்பட்ட ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிர்மல் குமாரின் இந்தப் பதில் அமைந்துள்ளது.

மறுபுறம், திமுக – காங்கிரஸ் இடையிலான உறவில் விரிசல் இருப்பதாகக் கருதப்படும் சூழலில், தவெகவை நோக்கி காங்கிரஸ் நகரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன. இத்தகைய சிக்கலான அரசியல் சூழலில், பாஜகவை மிகத்தெளிவாகக் கொள்கை எதிரியாக அறிவிப்பதன் மூலம், தவெக தனது தனித்துவமான பாதையைத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் கெடுபிடிகளுக்குத் தங்கள் கட்சி அடிபணியாது என்பதையே நிர்மல் குமாரின் இந்த விளக்கம் உணர்த்துகிறது.

Nanthini

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

37 minutes ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

47 minutes ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

58 minutes ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

1 மணத்தியாலம் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

1 மணத்தியாலம் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

1 மணத்தியாலம் ago