தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, சுமார் 24,033 டாஸ்மாக் கடைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2025-ஆம் ஆண்டில் ஒரு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு மட்டுமின்றி, பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ESI மருத்துவக் காப்பீடு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் அவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்தும் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…