தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலைமை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த முறையும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக விஜயையும் தங்கள் கூட்டணியில் இணைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுக அழியக்கூடாது என்று திருமாவளவன் தொடர்ச்சியாக அட்வைஸ் செய்வது கூட்டணி கணக்குக்காக அல்ல என்று எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார். அதிமுகவை அடித்துவிட்டு அந்த இடத்தை பாஜக பிடிக்க நினைப்பதாகவும், அந்த சதி திட்டத்திற்கு அதிமுக ஆளாகிறதே என்ற ஆதங்கத்தில் தான் அப்படி சொல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இபிஎஸ்-க்கு சமூக நீதி மீது எந்த பற்றும் இல்லை என்ற அவர், அதிமுக என்ன ஆபர் கொடுத்தாலும் அங்கு போக வாய்ப்பே இல்லை என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…