தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் ஒதுக்கப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விஷ்ணு விஷால் தற்போது ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகின்றார். விஷ்ணு விஷால் அடுத்து இரண்டு வானம் மற்றும் ஆரியன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மூன்று திரைப்படங்களில் நடிக்க உள்ளார். அதேசமயம் கட்டாகுஸ்தி 2, ராட்சசன் 2 படங்களில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் விஷ்ணு விஷால் கூறி இருந்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் சினிமாவில் தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்து மனம் திறந்து உள்ளார். அதில், சினிமாவில் முதலில் 7 வருடங்களாக என்னை ரிஜெக்ட் பண்ணாங்க. அதனால் மனம் உடைந்து போனாலும் நம்மை இப்படி செய்யும் இந்த சினிமாவில் எப்படியாவது பெரிய ஆளாகி விட வேண்டும் என முடிவு செய்தேன். நமக்கு என்ன குறைச்சல் என்ற வெறி எனக்குள் வந்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு நான்தான் ஒப்பந்தமானேன். அதுதான் என் நடிப்பில் உருவாக வேண்டிய முதல் படம்.
ஆனால் அந்தப் படத்திற்காக நான் என் உடல் பாகையை மாற்றிய நிலையில் எந்த காரணமும் இல்லாமல் படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். அதனை இன்னும் நான் மறக்கவில்லை. இந்த படம் தொடர்பாக என் அப்பாவிடமும் பேசி இருக்கிறார்கள். அவங்க சொன்னத கேட்டு எங்க அப்பாவுக்கு ஒரு மாதிரி ஆனதை பார்த்து எனக்கு ரொம்பவும் வருத்தமா இருந்துச்சு. இதுக்கு மேலயும் சினிமாவில் இப்படி அசிங்கம் வேண்டாம் என்று படித்த படிப்புக்கு வேலை செய்ய சென்று விட்டேன். எனக்கு சினிமாவே வேண்டாம் அப்பா என சொல்லிவிட்டு வேலைக்கு சேர்ந்தேன். பரத் நடித்த காதல் படத்தில் ஹீரோவாக என்னை தான் நடிக்க கேட்டிருந்தனர். அதுவும் சில காரணங்களால் நடக்காமல் போக பிறகு கிடைத்த வாய்ப்பு தான் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் என்று வேதனையுடன் விஷ்ணு விஷால் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…