Categories: CINEMA

பெரிய டைரக்டரையே சரிச்சிட்டானே, ராசியில்லாத ஆள் போல- விக்ரமின் கெரியரையே குளோஸ் செய்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக எந்த கெட்டப் போட்டாலும் பொருந்தி நடிக்க கூடிய நடிகராக திகழ்ந்து வருபவர் சீயான் விக்ரம். “சேது” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமான நடிகராக ஆன விக்ரம், அத்திரைப்படத்தின் மூலம் தனது அசாத்தியமான நடிப்புத் திறமையையும் வெளிகாட்டினார்.

அதன் பின் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான் என்பது போல் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

ஆனால் தொடக்க காலகட்டத்தில் தனது கெரியரில் மிகவும் கஷ்டப்பட்டவர் விக்ரம். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் கதவுகள் திறக்கப்படவில்லை. ஆதலால் எப்படியாவது சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்று வெறிகொண்டு சினிமாத்துறையிலேயே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். எக்காரணத்தைக் கொண்டும் சினிமாவை விட்டுவிடக்கூடாது என்று நினைத்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு பல திரைப்படங்களில் டப்பிங் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்துதான் சினிமாவில் நடிகராகும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் “தங்கலான்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். ஆதலால் இத்திரைப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, விக்ரம் குறித்து ஒரு செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது ஸ்ரீதர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு விக்ரம் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் “தந்துவிட்டேன் என்னை”. தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்தவர் ஸ்ரீதர். அவர் இயக்கியதால் இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் படுதோல்வியடைந்தது. “ஸ்ரீதரே டைரக்ட் பண்ணியும் படம் ஓடலைனா விக்ரம் ராசியில்லாத ஆளா இருப்பார் போல” என்று பேசத்தொடங்கிவிட்டனராம்.

அதே போல் அஜித்தும் விக்ரமும் இணைந்து நடித்த “உல்லாசம்” திரைப்படமும் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஃப்ளாப் ஆனது. இதற்கும் விக்ரம்தான் காரணம் என்று பேசத்தொடங்கிவிட்டனராம். எனினும் மனம் தளராமல் தொடர்ந்து சினிமாவில் போராடி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம்.

Arun

Recent Posts

பெட்டில் ஹாயாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்தி இத்தானி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு…

4 hours ago

SK -வுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் விஜய் பட நடிகை.. வித்யாசமான காம்போவுக்கு வெயிட் பண்ணும் ரசிகர்கள்..!

டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகும் புதிய திரைப்படத்தில் நேஷனல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா…

6 hours ago

மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை முதலில் ஓகே பண்ணது இந்த நடிகை தான்.. அடடே அப்படியா..?

தமிழ் சினிமாவின் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாளும் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகி இருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி.…

7 hours ago

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்.. அவருக்கு பதில் புது எழிலாக இவரா..? வெளியான தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக…

8 hours ago

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

11 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

11 hours ago