Categories: சினிமா

“வீர தீர சூரன்” படத்தால் எகிறிய மார்க்கெட்.. விக்ரம் எடுத்த திடீர் முடிவால் ஆடிப் போன தயாரிப்பாளர்கள்..!

Spread the love

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். எஸ் யு அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரஜ் வெஞ்சார மூடும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திலிருந்து வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் இரண்டாவது பாகம் தற்போது வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என தெரிகிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை முடித்த கையோடு விக்ரம் தன்னுடைய 63வது படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படியான நிலையில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் பலரும் தங்களுடைய அடுத்த படத்திற்கு விக்ரமை முன்பதிவு செய்ய லைன் கட்டி நிற்கின்றனர். அதன்படி சத்யா ஜோதி, டான் பிக்சர்ஸ், விஜய் டிவி மகேந்திரனின் டெர்மரிக் மீடியா என அடுத்தடுத்து வரிசையாக விக்கிரமை வைத்து படம் பண்ண டேட் கேட்டு நின்று கொண்டிருக்கின்றனர்.

விக்ரமும் தற்போது பல இயக்குனர்களை அழைத்து கதை கேட்டு கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். அதன்படி தற்போது அவர் 50 கோடி வரை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அந்த சம்பளத்தை தருவதற்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். இதனிடையே வீர தீர சூரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிபி தபு இந்த லிஸ்டில் இருக்கிறார்.

வீர தீர சூரன் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் வெளியான கையோடு முதல் பாகத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு சூட்டோடு சூட்டாக படம் வெளி வந்தால்தான் வரவேற்பு இருக்கும் என்று அடுத்ததாக விக்ரமை அவரும் புக் செய்துள்ளார். அதனால் அடுத்தடுத்த படங்கள் லிஸ்டில் இருப்பதால் விக்ரம் அடுத்ததாக எந்த படத்தில் இணைவார் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

போக்குவரத்து நெரிசலால் டென்ஷன்… அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…. வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!

மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…

1 minute ago

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

9 minutes ago

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

13 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

16 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

17 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

31 minutes ago