குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் கவனம் இருத்தவர்தான் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகந்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் கதை தான் மகாராஜா. கதை வழக்கமானதாக இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு நித்திலன் சுவாமிநாதன் திரைக்கதை எழுதியிருந்த விதமே படத்தை பிளாக் பஸ்டர் வெற்றியாக மாற்றியது .
நான் லீனியர் முறை கதை சொல்ல எதிர்பார்க்காத திருப்பங்கள் உணர்ச்சிவசமான கதைகள் என மகாராஜா படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றது. இந்தி ரசிகர்களிடையே இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இந்த திரைப்படத்தை இந்தி ரீமேக் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நடிகர் ஆமீர் கான் மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரோலில் அவரே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திரை துறையை சேர்ந்த பலரும் மகாராஜா படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் திரையரங்கில் வெளிவந்து ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த மகாராஜா திரைப்படம் தற்போது ஓடிடியிலும் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. மகாராஜா திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 17 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இதுவரை 2 கோடிக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். இதன்மூலம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 150 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…