தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அவர் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
அதேசமயம் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார். இதனால் விஜய்க்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் NDA கூட்டணியில் விஜயை இணைக்க பாஜக விரும்புவதாக தகவல்கள் கசிந்தவாறு உள்ளன. அதற்கேற்றது போலவே தொட்டும் தொடாமல் பாஜகவை விஜய் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பாஜகவுடன் இணக்கமாக உள்ளீர்களா என விஜய் இடம் கேட்டதற்கு, அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ள கட்சியை விஜய் விமர்சனம் செய்வதாகவும் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…