தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இதனை சட்டரீதியாக எப்படி கையாளுவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார். அதேசமயம் விஜய்க்கு இந்த விஷயத்தில் ஆதரவாக செயல்பட்டு அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட 33 குடும்பத்தினர் பேருந்து மூலமாக மாமல்லபுரம் அனைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் சில குடும்பத்தினர் விமான மூலமாக இன்று வர உள்ளனர். நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்படும் அவர்களை இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிக்கின்றார். இதனைத் தொடர்ந்து கட்சி பணிகளை முடக்கிவிடும் விஜய் மீண்டும் பரப்புரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…