நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி எந்தவிதக் கருத்துகளையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய காணொளி ஒன்றில், தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பவர்களை வாழ விடுவதே மனிதநேயம் என்றும், அதனடிப்படையிலேயே தான் செயல்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தொடர்ச்சியாகத் தன்னையும் சீமானையும் இணைத்துத் தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இனி சீமானுக்கு உறுதுணையாக நிற்கப் போவதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தான் சீமானுக்கு ஆதரவாகப் பேசுவதால் தமக்கு பெரிய தொகை கைமாறியிருப்பதாகப் பலரும் பேசக்கூடும் எனவும், ஆனால் தன்னை யாராலும் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது எனவும் அவர் ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். நீண்ட காலமாகச் சீமானைக் கடுமையாக எதிர்த்து வந்த விஜயலட்சுமி, திடீரென அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜயலட்சுமியின் இந்த அதிரடியான கருத்துகள், சமீபகாலமாக விமர்சனங்களை முன்வைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினரை மறைமுகமாகச் சாடும் வகையிலேயே அமைந்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…