விராலிமலையில் திடீர்னு இறங்கிய விசில் சத்தம்…. தீபாவளி பரிசா? இல்லை தேர்தல் மாஸ்டர்ப்ளானா?…. விஜயபாஸ்கரின் அதிரடி கிஃப்ட்….!

Spread the love

விராலிமலை தொகுதி மக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தீபாவளி பரிசுகளை வழங்கி தனது தொகுதிப் பிடியை பலப்படுத்தி வருகிறார். ஒரு குலாப் ஜாமுன் டூபாஸ், இரண்டு டிபன் பாக்ஸ்கள் மற்றும் ஒரு விசில் ஆகியவை அடங்கிய பரிசுப் பொருட்கள் கட்சி பேதமின்றி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. “என்றும் மக்கள் பணியில் விஜயபாஸ்கர்” என்ற வாசகமும், அவரது புகைப்படமும் பொறிக்கப்பட்டுள்ள இந்தப் பைகள் தொகுதி முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர்தான் வேட்பாளர் என்பது உறுதியான நிலையில், அவர் முன்கூட்டியே தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

மறுபுறம், தவெக தலைவர் விஜய் ஏற்கனவே விராலிமலை மற்றும் பெருந்துறை தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தி தனது பலத்தை காட்டியுள்ளார். மேலும், சுவர் விளம்பரங்கள் மற்றும் மாற்றுக்கட்சி நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் பணிகளிலும் தவெகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வரும் இடைத்தேர்தலில் அங்கு மும்முனை அல்லது கடுமையான போட்டி நிலவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அமைச்சர் விக்னேஷும் தனது தொகுதி மக்களுக்கு ஸ்வீட் பாக்ஸ், புதிய காலண்டர், சட்டைத் துணி மற்றும் பட்டாசு கிப்ட் பாக்ஸ் போன்றவற்றை வழங்கி வருகிறார். தீபாவளிப் பரிசுகள் மூலமாகவும், மக்கள் சந்திப்புப் பணிகள் மூலமாகவும் அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிரூபிக்கத் தொடங்கியிருப்பது, வரவிருக்கும் இடைத்தேர்தலின் அனலை இப்போதே கூட்டியுள்ளது.

Nanthini

Recent Posts

“பச்சைக்கிளி முத்துச்சரம்”…. புகழ் நடிகை மரணம்”…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. சோகத்தில் தமிழ் திரையுலகம்….!

எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்து 1973-ல் வெளியான புகழ்பெற்ற திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம்…

24 seconds ago

“சொன்னது ஒண்ணு.. செஞ்சது ஒண்ணு”…. சோப்ளாங்கி அரசு.. வாய் திறக்காமல் இருப்பது ஏன்?…. முதல்வர் விஜய்யை இறங்கி அடித்த உதயநிதி….!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தலின் போது அக்கட்சியின் தலைவர் விஜய்…

10 minutes ago

காரை ரிவர்ஸ் எடுத்த கணவர்…. பின்னால் நின்ற மனைவி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. கலங்க வைக்கும் சிசிடி’வி வீடியோ…!!

கேரளாவில் கணவர் காரை பின்னோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…

12 minutes ago

திடீர் திருப்பம்… ரூ5,000 கோடி மோசடி வழக்கு முதல் C. விஜயபாஸ்கர் வரை…. விஜய்க்கு கிளம்பிய 2 பெரிய சிக்கல்கள்…. கலக்கத்தில் நிர்வாகிகள்….!

தமிழக அரசியல் களத்தில் மாற்று சக்தியாகத் தன்னை முன்வைத்து களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ஒரே…

22 minutes ago

மின்னல் வேகத்தில் தூக்கி வீசிய பைக்…! நடுரோட்டில் துடித்த 8 வயது சிறுவன்…! மிரள வைக்கும் சிசிடிவி வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபட்டின் சிசிடிவி…

26 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘ஷோ’… உள்ளுக்குள் ‘இந்து வேஷம்’?”….. துரைமுருகன் வீட்டு கல்யாணத்தில் ரகசியமாக நடந்த சம்பவம்…. எச்.ராஜா கொடுத்த திடீர் ட்விஸ்ட்…!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் வேத மந்திரங்கள் முழங்க, இந்து முறைப்படி சடங்குகள் நடைபெற்றதற்கு பாஜக மூத்த தலைவர்…

27 minutes ago