#image_title
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். திரையில் அவர் வந்தாலே ரசிகர்கள் ஹிஸ்டீரியா வந்தது போல சன்னதம் ஆடுகிறார்கள். இத்தனைக்கும் அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களை எலலாம் கலைத்துவிட்டார். ரசிகர்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டார்.
இன்று இவ்வளவு மாஸாக இருக்கும் அஜித் தன்னுடைய திரையுலக ஆரம்பகாலத்தில் தட்டு தடுமாறிதான் முன்னேறினார். இப்போது தன்னுடைய போட்டியாளராக இருக்கும் விஜய்யின் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அவர் செகண்ட் ஹீரோவாக கூட நடித்துள்ளார்.
விஜய்யுடன் அஜித் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் ஹீரோ விஜய்யின் நண்பராக அஜித் நடித்திருப்பார். தன்னுடைய காதல் தோல்வியால் அஜித் தற்கொலை செய்துகொள்ள விஜய் அந்த பாதிப்பால் காதலில் விழமாட்டேன் என முடிவு செய்து உறுதியாக இருப்பார். அதன் பின்னர் அவர் காதலில் விழுவதும், அதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்தான் கதை.
இதன் பின்னர் இருவரும் நேருக்கு நேர் படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது, அஜித்தும் 10 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ஆனால் அதன் பின்னர் அவர் விலக சூர்யா நடித்தார். அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் நீ வருவாய் என படத்தில் முதலில் அஜித்தும் விஜய்யும்தான் சேர்ந்து நடிப்பதாக இருந்ததாம்.
இதுகுறித்து நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் “முதலில் பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் விஜய்தான் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அஜித் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றதும், அந்த கதாபாத்திரம் பற்றி கேள்விபட்டு ‘நான் அதில் நடிக்கிறேன்’ என்றார். ஆனால் அதற்குள்ளாகவே அஜித்தை அந்த கதாபாத்திரத்துக்கு ஓகே பண்ணிவிட்டோம் என்றதும் அவர் விலகிக் கொண்டார். அப்படிதான் படத்துக்குள் பார்த்திபன் வந்தார்” எனப் பலரும் அறியாத தகவலைக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…