“10 நாள் தான் டைம்.. வீடு வீடா போங்க”… தொண்டர்களுக்கு விஜய் கொடுத்த ‘சீக்ரெட்’ அசைன்மென்ட்… தேர்தல் களத்தில் அதிரப்போகும் தவெக…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தனது கட்சித் தொண்டர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” என உருக்கமாகத் தொடங்கி, தேர்தல் பணிகளில் தொண்டர்களின் பங்களிப்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியுள்ளார். வரும் தேர்தல் ஒரு தலைமுறைக்கான மாற்றம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உண்மையான மக்களாட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த 10 நாட்களுக்குத் தொண்டர்கள் தீவிரமான களப்பணியில் ஈடுபட வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளார். கட்சி உறுப்பினர்கள், வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைவரும் தங்களுக்கு உகந்த நேரத்தில், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதன் மூலம் மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாகத் திகழ வேண்டும் என்பதே அவரது பிரதான இலக்காக உள்ளது.

நிர்வாகிகளுக்கு இடையேயான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய விஜய், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்விதத் தன்முனைப்பும் இன்றி, தோழமை உணர்வோடு மக்களை அணுகி, கட்சியின் கொள்கைகளையும் இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தையும் விளக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தன்னலமற்ற உழைப்பு மட்டுமே கழகத்தின் வெற்றிப் பயணத்தை வலுப்படுத்தும் என்றும், வாகை சூடும் வரலாறு மீண்டும் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் தொண்டர்களை வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிக்க விஜய் உற்சாகப்படுத்தினாலும், இன்று கடலூரில் நடைபெறவிருந்த அவரது பிரச்சாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், “நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்ற உறுதியான வாசகங்களுடன் அவர் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார். களத்தில் தொண்டர்கள் காட்டும் வேகமும், விஜய் விடுத்துள்ள இந்த நேரடி வேண்டுகோளும் தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

7 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

7 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

7 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

7 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

7 மணத்தியாலங்கள் ago