தமிழக அரசியல் வரலாற்றில் தடம் பதித்த திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்தை உடைத்து, புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்கியுள்ளது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக). நடந்து முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில், முதன்முறையாக களம் கண்ட தவெக, யாரும் எதிர்பாராத வகையில் 108 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றி பெற்று சாதனை படைத்தது. தனிப்பெரும்பான்மையை எட்டவில்லை என்றாலும், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தவெக வெற்றிகரமாக ஆட்சியை அமைத்துள்ளது. சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தனது பெரும்பான்மையை நிரூபித்து, தமிழகத்தில் தனது அரசியல் ஆளுமையை முதல்வர் விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த கையோடு, தவெக தனது அடுத்த கட்டப் பாய்ச்சலாக தேசிய அரசியலில் கால்பதிக்கத் திட்டமிட்டு வியூகங்களை வகுத்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் ரசிகர் மன்றமாகத் தொடங்கி, பின்னர் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என உருவெடுத்து, இன்று ஆளும் கட்சியாக மாறியுள்ள இந்த அமைப்பு, தற்போது பிற மாநிலங்களிலும் தனது அரசியல் கட்டமைப்பை விஸ்தரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து 3 இடங்களில் வெற்றி பெற்று, அங்கு எதிர்க்கட்சித் தரப்பில் முக்கிய இடத்தைப் பிடித்து அண்டை மாநிலத்திலும் தவெக தனது அரசியல் கணக்கைத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியைத் தொடர்ந்து, நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கும் கேரள மாநிலத்திலும் தவெக தனது அரசியல் தடம் பதிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. சமீபத்தில் திருச்சூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றதோடு, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளாவைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வாழும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும், விஜய் மக்கள் இயக்கம் மூலமாக அடிமட்ட அளவிலான கட்சி அமைப்புகளை உருவாக்கும் பூர்வாங்கப் பணிகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.
தென்னிந்திய அரசியலில் தவெக-வின் இந்த அசுர வளர்ச்சி குறித்து அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமெனில், பல மாநிலங்களில் குறிப்பிட்ட வாக்கு சதவீதமும், தேர்தல் வெற்றிகளும் அவசியமாகும். அதனை மனதில் வைத்தே, நீண்ட கால அரசியல் திட்டமிடலுடன் விஜய் தரப்பு இந்த அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் எல்லையைத் தாண்டி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்க தவெக எடுத்து வரும் இந்த முயற்சிகள், இந்திய அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…