கருத்து கணிப்பா..? கடுப்புல விட்ட கணிப்பா..? ஒவ்வொரு வீட்டிலும் நேரில் போய் பாருங்க ஷாக் ஆகிடுவீங்க… விஜய் விட்ட சவால்..!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அண்மையில் வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகளைக் கடுமையாகச் சாடினார். தற்போதைய கணிப்புகளில் சில “கடுப்பில் விட்ட கணிப்புகளாக” இருப்பதாகக் கிண்டலடித்த அவர், உண்மையான நிலவரம் களத்தில் வேறாக இருப்பதாகக் குறிப்பிட்டார். கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று பார்த்தால், அனைத்து வீடுகளிலும் தவெக-விற்கு இருக்கும் ஆதரவைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என்றும், அந்த அதிர்ச்சி தாங்க முடியாவிட்டால் முடிவுகளை ரப்பர் வைத்து அழித்துவிட்டு மீண்டும் கணிப்புகளை நடத்திப் பார்க்கட்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.

அதே நேரத்தில், நேர்மையான முறையில் எடுக்கப்படும் உண்மையான கணிப்புகளைத் தான் மதிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அந்த மாற்றத்தின் அடையாளமாகவே தவெக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த போலி கணிப்புகளைத் தகர்த்து, மக்களின் பேராதரவுடன் தனது கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்பதில் தமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகத் தொண்டர்கள் மத்தியில் விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

34 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

36 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

40 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

43 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago