#image_title
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வெளியாகி உள்ள இரண்டாம் பாக திரைப்படம் தான் விடுதலை 2. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்க விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சமூகப் பிரச்சனையை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அற்புதமாக எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
பெருமாள் வாத்தியார் யார் என்றே தெரியாமல் அவரை சந்திக்கும் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலையே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடைந்திருக்கும். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார் ஒரு சாதாரண கூலி தொழிலாளி எப்படி புரட்சி வீரராக மாறுகிறார் என்ற கதையை வெற்றிமாறன் இயக்கிய நிலையில் 2 நாட்களுக்கு முன்பு முன்தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியான விடுதலை 2 திரைப்படம் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 10 கோடி வசூலை குவித்தது.
இந்த நிலையில் விடுதலை திரைப்படம் வெளியாகி ஆறாம் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 3.18 கோடி வசூலித்து மொத்தமாக 28.68 கோடி ரூபாயும், தெலுங்கில் ஒரே நாளில் 11 லட்சம் வசூலித்து மொத்தமாக 2.01 கோடியும் வசூலித்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து படம் வெளியான முதல் நாள் முதல் தற்போது வரை அதாவது 7 நாட்களில் உலகளவில் ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…