#image_title
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வெளியாகி உள்ள இரண்டாம் பாக திரைப்படம் தான் விடுதலை 2. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்க விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
சமூகப் பிரச்சனையை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அற்புதமாக எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. பெருமாள் வாத்தியார் யார் என்றே தெரியாமல் அவரை சந்திக்கும் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலையே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடைந்திருக்கும்.
இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார் ஒரு சாதாரண கூலி தொழிலாளி எப்படி புரட்சி வீரராக மாறுகிறார் என்ற கதையை வெற்றிமாறன் இயக்கிய நிலையில் 2 நாட்களுக்கு முன்பு முன்தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியான விடுதலை 2 திரைப்படம் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 10 கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் 5 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள வசூல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…