Categories: CINEMA

இந்திய சினிமாவை அதிரவிட்ட மக்கள் செல்வன்.. ‘ஜவான்’ படத்தில் வில்லனாக நடிக்க வாங்கிய சம்பளம் இதனை கோடியா..?

நடிகர் விஜய்சேதுபதி. துணை கதாபாத்திரத்தில் நடித்து மெது மெதுவாக ஹீரோவாக உயர்ந்தவர். இப்போதும் பல ஹீரோக்கள், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என தங்களுக்கு ஒரு வரைமுறை வைத்திருக்கக் கூடிய நிலையில், தனக்கென்று வரக் கூடிய அனைத்து கதாபாத்திரங்களையும் தைரியமாக ஏற்று நடித்து வருகிறார். குறிப்பாக வில்லன் வேடத்தில். வில்லனாக இருந்து ஹீரோவாக மாறிய ரஜினி, சத்தியராஜ் போன்றோரை தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால் ஹீரோவாக இருக்கும் போதே பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாகவும் நடித்து அதிலும் கலக்கி வருகிறார் விஜய்சேதுபதி.

#image_title

அதன்படி, முதன் முதலாக விக்ரம்-வேதா இப்படத்தில் முழு வில்லன் என்று சித்தரிக்கப்படாவிட்டாலும், எதிர்மறையான கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்து விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டினார். அதனை தொடந்து பாலிவுட்டிலும் கால் பதிக்கத் தொடங்கினார். பாலிவுட் சீரிஸான ஃபர்ஸி, அதனை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருந்த ஜவான் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

#image_title

அட்லீ இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பான் இந்தியா படமாக வெளியாகி ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்தது. இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு 21 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டில் ஒரு வில்லனுக்கு கொடுக்கப்பட அதிக சம்பளம் என்றால் அது ஜவான் படத்தில் விஜய் சேதுபதிக்காகத் தான். இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் வில்லனாக நடித்த ஜான் அப்ரஹாம்மிற்கே 20 கோடி ரூபாய் சம்பளம் தான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

3 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

4 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

5 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

6 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

8 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

8 hours ago