2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து நடத்திய முதற்கட்ட ரகசியக் கருத்துக்கணிப்பு முடிவுகள் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தனியார் ஆய்வு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தாலும், அது வாக்குகளாகவும் வெற்றியாகவும் மாறுவதில் பெரும் சவால்கள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் வலுவான வாக்கு வங்கியை உடைப்பது தற்போதைய சூழலில் கடினம் என்றும், பல தொகுதிகளில் த.வெ.க மூன்றாவது இடத்தையே பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தரவுகளைக் கண்டு அதிருப்தியடைந்த விஜய், மேலோட்டமான தகவல்களை நிராகரித்துவிட்டு, பின்னடைவிற்கான உண்மையான காரணங்களை ஆழமாக ஆராயும்படி தனது குழுவினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். “போய் மறுபடியும் எடுத்துட்டு வாங்க” என்று கண்டிப்புடன் கூறியுள்ள அவர், கட்சி எந்தெந்த பகுதிகளில் பலவீனமாக உள்ளது மற்றும் எந்தெந்த சமூகப் பிரிவினர் த.வெ.க-வை ஏற்கத் தயங்குகிறார்கள் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியுள்ளார். வெறும் சினிமா புகழை மட்டும் நம்பாமல், கள யதார்த்தத்தை எதிர்கொள்ள அவர் எடுத்துள்ள இந்த முயற்சி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கியப் பலவீனங்களாக கொள்கை தெளிவின்மை, கிராமப்புறக் கட்டமைப்புக் குறைபாடு மற்றும் மகளிர் வாக்கு வங்கி இல்லாமை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தி.மு.க அரசின் நலத்திட்டங்களால் கவரப்பட்டுள்ள பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் த.வெ.க-விடம் இன்னும் ஈர்க்கக்கூடிய மாற்றுத் திட்டங்கள் இல்லை என்பது ஒரு பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், விஜய்யைத் தவிர மக்களிடையே அறிமுகமான இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாததும், வலுவான கூட்டணிக் கட்சிகள் அமையாததும் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் காரணிகளாகக் கூறப்படுகின்றன.
இந்த இரண்டாம் கட்ட விரிவான ஆய்வின் முடிவுகளுக்குப் பிறகு, விஜய் தனது அரசியல் வியூகத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. “நாம் ஏன் ஜெயிக்க முடியாது?” என்ற கோணத்தில் தோல்விகளை முன்கூட்டியே ஆராய்ந்து, அவற்றைச் சரிசெய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இந்த ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே, கட்சியின் கூட்டணி மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றியை நோக்கித் தீவிரமாக உழைக்கத் தயாராகி வரும் விஜய்யின் இந்த அடுத்தகட்ட நகர்வு, 2026 தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…