தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில், அக்கட்சியின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே விஜய்க்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்த ஜான் ஆரோக்கியசாமி, மாநாடுகள் மற்றும் பிராண்டிங் பணிகளில் முக்கியப் பங்காற்றி வந்தார். தற்போது அவர் கட்சியிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவின் வருகைக்குப் பிறகு, கட்சியில் தனது முக்கியத்துவம் குறைந்து வருவதாக ஜான் ஆரோக்கியசாமி கருதுவதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ அலுவலகத்தில் ஜான் ஆரோக்கியசாமியின் குழுவினர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர்.
ஜான் ஆரோக்கியசாமியின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. விஜய், ஜான் ஆரோக்கியசாமியை மட்டுமே நம்பி முடிவெடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதே சமயம், ஜான் ஆரோக்கியசாமியின் வியூகங்களுக்கு மாறாக ஆதவ் அர்ஜுனா தன்னிச்சையாகப் பேட்டி அளிப்பதும், அறிக்கைகள் விடுவதும் விஜய்க்குப் பிடித்துப் போனது ஜான் ஆரோக்கியசாமியை கடும் அப்செட் அடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா அளித்த மெகா விருந்து உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை ஜான் ஆரோக்கியசாமி புறக்கணித்திருப்பது இந்த மோதலை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் முக்கிய தூணாகக் கருதப்பட்ட ஒரு வியூக வகுப்பாளர் விலகப் போவது விஜய்க்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து கட்சித் தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…