“எம்.ஜி.ஆர் இல்ல, அவர் கருணாநிதி”…. விஜய் பற்றி வானதி சீனிவாசன் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை…. தமிழக அரசியலில் புயலை கிளப்பிய வானதி….!

Spread the love

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில், காவி உடை மற்றும் திருநீற்றுடன் இருந்த திருவள்ளுவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு அப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனங்களை எழுப்பிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் அருண்ராஜும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தவெகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

தவெகவின் இந்த கண்டனத்தை முன்வைத்து, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தவெக மற்றும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் மதிமுக போன்ற கட்சிகளுக்குக் காவி நிறமும், இந்து மதச் சின்னங்களும் எப்போதுமே வேப்பங்காயாகக் கசப்பவை என்றும், அவர்களின் இந்து மத வெறுப்பு உலகறிந்தது என்றும் சாடியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போதைய திமுக ஆட்சியைப் போன்றே செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளுவர் திருக்குறளில் பிறவி, ஊழ், தவம், அறம் போன்ற இந்து மதக் கோட்பாடுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து” மற்றும் “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்” போன்ற குறட்பாக்களை அதற்கு உதாரணமாகக் காட்டியுள்ளார். காவி உடையுடனும், இந்து மத அடையாளங்களுடனும் இருந்த திருவள்ளுவரை வெள்ளை உடைக்கு மாற்றியதே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிதான் என்றும், தற்போது தவெகவும் அதே இந்து மத வெறுப்புப் பாதையைத் தன் கொள்கையாகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, தவெக தலைவர் ஜோசப் விஜய்யை அவரது கட்சியினர் எம்.ஜி.ஆரின் மறுவுருவமாகக் கொண்டாடினாலும், அவர் தனது ஒவ்வொரு செயலின் மூலமும் ‘தான் ஒரு கருணாநிதி’ என்பதை நிரூபித்து வருவதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தவெகவின் ஆட்சி என்பது தமிழ்நாட்டின் புதிய தொடக்கமல்ல, அது திமுகவின் தொடர்ச்சிதான் என்பதை கடந்த சில வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் உணர்த்துவதாகக் கூறிய அவர், திமுகவின் வழியில் பயணிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தையும், திமுகவை வீழ்த்துவது போலவே தமிழ்நாட்டு மக்கள் ஒருநாள் வீழ்த்துவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“முதல்ல காச வை.. அப்புறம் டீயை குடி”!… வாக்குவாதம் முற்றியதால் இளைஞருக்கு நேர்ந்த கதி… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதுரைசலூர் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த…

32 minutes ago

“ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு!”… கனமழை வைத்த மரண ட்விஸ்ட்… இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…

43 minutes ago

திக் திக்… துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே… அலறிய 12 வயது சிறுவன்… 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி…!

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…

51 minutes ago

கள்ளக்காதல் மோகம்!… எல்லாம் நாடகமா?… பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்… அரங்கேறிய கொடூரம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…

53 minutes ago

1,000 பேருக்கு வேலை குடுங்க… இல்லன்னா வெளியே போக முடியாது… அமைச்சரின் காரை மறித்து மிரளவைத்த கலைஞர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

55 minutes ago

அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…

1 மணத்தியாலம் ago