தமிழக அரசியலில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவ முழக்கத்துடன் கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் என்ற பெரும் சுழலில் சிக்கித் தவிக்கிறது. ஆரம்பத்தில் தொண்டர்களிடையே நிலவிய “தளபதி வருவார், மாற்றத்தைத் தருவார்” என்ற உற்சாகம் மறைந்து, தற்போது மாநாட்டிற்காகவும் கட்சிப் பணிகளுக்காகவும் கடன் வாங்கிய நிர்வாகிகள் “கடன்காரன் வருவான், கழுத்தைப் பிடிப்பான்” என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஆக்ஷன் படம்போல விறுவிறுப்பாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் அரசியல் பயணம், தற்போது ஒரு சோகக் கதையாக நீண்டு கொண்டிருப்பது அடிமட்டத் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துத் தலைமை காட்டும் மந்தகதி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகளைக் கையை விரிக்கச் செய்திருக்கிறது. கட்சிப் பணிகளுக்காகத் தங்கள் கைக்காசைச் செலவு செய்துவிட்டு, இப்போது வட்டிக்குக் கடன் வாங்கித் திண்டாடும் மாவட்டச் செயலாளர்களின் குமுறல்களைத் தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் களம் என்பது வெறும் உணர்ச்சிமிக்க பேச்சால் மட்டும் அமைவது அல்ல; அதற்கு ‘பணபலம்’ என்ற எரிபொருள் மிக அவசியம் என்பதை உணராதது போன்ற தலைமையின் செயல்பாடுகள், அக்கட்சியின் அடிமட்டக் கட்டுமானத்தையே ஆட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளன.
நிர்வாகிகளின் மற்றொரு முக்கியக் குற்றச்சாட்டு என்னவென்றால், விஜய் தன்னிடம் உள்ள வசதி படைத்தவர்களை (Rich background) மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள விரும்புவதாக எழுந்துள்ள பேச்சுதான். உள்ளூர் அளவில் செல்வாக்கு இருந்தும், கையில் பண வசதி இல்லாத காரணத்தால் பல விசுவாசமான நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிகிறது. அதோடு, விஜய் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்யத் தயாராக இல்லை என்றும், மாறாக நிர்வாகிகளையே நிதியைத் திரட்டச் சொல்வதாகவும் பரவும் தகவல்கள், ரத்தம் சிந்தி உழைக்கும் தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளன. இது “பணக்காரர்களுக்கு மட்டுமா விஜய்?” என்ற கேள்வியையும் கட்சியின் உள்வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
இதே நிலை நீடித்தால், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னரே முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாம்களுக்குத் தாவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல், “போதும்டா சாமி” என்று அரசியலில் இருந்தே விலகும் மனநிலைக்குப் பல நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர். “வெற்றி நிச்சயம்” என்று முழங்கிய தவெக, இப்போது ‘நிதி நெருக்கடி’ என்ற சுழலில் இருந்து மீள வேண்டுமானால், விஜய் தனது திட்டமிடலை மாற்றியமைத்து நிர்வாகிகளுக்குத் துணையாக நிற்க வேண்டியது கட்டாயமாகும். கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் தலையெழுத்து இப்போது தலைமையின் அடுத்தகட்ட முடிவிலேயே தங்கியிருக்கிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…