“சினிமாலயும் காப்பி.. அரசியல்லயும் காப்பி”… நீங்க ஒரிஜினலா அங்கிள்… விஜய்யை பங்கமாய் கலாய்த்த அதிமுக ஐடி விங்…!

Spread the love

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே தற்போது வார்த்தைப் போர் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் ஐடி விங் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளது. விஜய்யை “பனையூர் பண்ணையார் அங்கிள்” என்று குறிப்பிட்டு, அவர் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலுமே ‘காப்பி பேஸ்ட்’ (Copy Paste) வேலைகளைத் தான் செய்கிறார் என்று அதிமுக சாடியுள்ளது.

விஜய்யின் சினிமா வாழ்க்கையைப் பற்றி விமர்சித்துள்ள அதிமுக, அவர் தனது தந்தை மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் என்றும், அங்கு அவர் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் போன்ற மாபெரும் கலைஞர்களைப் பார்த்து அப்படியே நகலெடுத்து (Copy Paste) நடித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சொந்தமாக ஒரு வரியைக் கூடப் பேசத் தெரியாத விஜய், மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் ‘ஆக்ஷன்’ வசனங்களை அப்படியே ஒப்புவிப்பதாக அதிமுக கிண்டல் செய்துள்ளது. மேலும், சினிமாவில் 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்பது ஒருவகை கொள்ளை இல்லையா என்றும், அந்த வகையில் விஜய்க்கு 30 வருட கொள்ளை அனுபவம் இருப்பதாகவும் பகிரங்கமாகச் சாடியுள்ளது.

அரசியல் ரீதியாக விஜய்யைச் சாடியுள்ள அதிமுக, அவர் பிற கட்சிகளின் தலைவர்களுடைய கொள்கைகளையும், வரலாற்றுத் தலைவர்களின் அடையாளங்களையும் திருடி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாகக் கூறியுள்ளது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர் அரசியல் சவாரி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு வாட்ஸ்அப் குழுவைப் போல ஒரு கட்சியை நடத்துவதாகவும் அதிமுக விமர்சித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களையே விஜய் தற்போது ‘காப்பி’ அடித்துப் பேசி வருவதாகவும் அதிமுக தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதியாக, விஜய்யின் அரசியல் புரிதல் மற்றும் அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டிய அதிமுக, “ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்” என்று மிகக் கடுமையான தொனியில் பதிவிட்டுள்ளது. சேலம் கூட்டத்தின் போது வட மாநிலத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது மற்றும் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போன்ற துயரமான சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விஜய்க்கு அரசியல் நாகரிகம் இல்லை என்றும் அதிமுக விமர்சித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிமுகவின் இந்தப் பதிலடி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago