#image_title
கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது. இன்னும் ராஜஸ்தான், இஸ்தான்புல், இலங்கை, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் மீதி படப்பிடிப்பு நடத்த படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தை ஏஜிஸ் எண்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சம்பளம் ரூ. 200 என்று கூறப்படுகிறது. இதில் அப்பா, மகன் என்ற இரட்டை கேரக்டரில் விஜய் நடிக்கிறார். சமீபத்தில் கிளீன் சேவ் முகத்துடன் விஜய் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவை பொருத்த வரை, படப்பிடிப்பு தளமே ஒரு சுற்றுலா தளம், பிக்னிக் ஸ்பாட் போல்தான் காட்சியளிக்கும். அவரது படங்களில் நடிப்பது பெரும்பாலும் நண்பர்களே என்பதால், ஜாலியாக பேசி சிரித்து நடித்து, ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பாக இருக்கும்.
ஒரு படம் எடுப்பது போல இல்லாமல், ஏதோ விளையாட்டு நிகழ்ச்சி போல அந்த இடம் ஜாலியாக ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. விஜய் நடிக்கும் கோட் பட படப்பிடிப்பிலும் அதுவே நடக்கிறது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நேரம் நிறைய விரயமாகிறது. பல நேரங்களில் மிக மெதுவாக படப்பிடிப்பு பணிகள் நடக்கிறது.
நடிகர் விஜய் ஸ்டைல் என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தில் அவரவர் பணியை அவரவர் சின்சியராக செய்ய வேண்டும். படப்பிடிப்பை தேவையின்றி தாமதமாக்க கூடாது. குறிப்பாக ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்கும் இடையே இடைவெளி விடக்கூடாது என்பதே. ஆனால் வெங்கட்பிரபு வெளிநாடு படப்பிடிப்பு சென்று வந்த பிறகு சில நாட்கள் இடைவெளி விடுவதும், மீண்டும் அடுத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு
சில நாட்கள் இடைவெளி விடுவதும் படத்தை மிகவும் தாமதிப்பதாக விஜய் கடுப்பாகி உள்ளார். இதனால் வெங்கட்பிரபுவிடம் இதுகுறித்த நேரடியாக பேசிய விஜய், இப்படி பண்ணாதீங்க. படத்தை ஸ்பீடு பண்ணுங்க, ரொம்ப ரொம்ப ஸ்லோவா போகாதீங்க இப்படி லேட் பண்ணாதீங்க, வேகமா படப்பிடிப்பு வேலைகளை கவனிங்க என்று கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…