ஜெயலலிதா இருந்திருந்தால் இப்போது விஜய் இருந்திருக்க மாட்டார் என்று தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடிகர் விஜய் நடத்தியது பொதுக்குழு கிடையாது. அது ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட். எங்களுக்கு தெரிந்து அது ஷூட்டிங் ஸ்பாட் மாதிரி தான் இருந்தது. அங்கு ஆதங்கத்தை நடிகர் விஜய் பேசுவதை விட அங்கே இருக்கக்கூடிய சில குண்டர்கள் சில அண்ணன்மார்கள் தான் அதிகமாக பேசினாங்க. கரூர் சம்பவத்தில் அந்த 41 பேர் வந்து மரணம் அடைந்தார்கள். அந்த சம்பவம் அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தார் என்றால் இந்நேரம் தமிழக வெற்றிக்கலகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்திருக்காது.
அடுத்தடுத்து நடக்கக்கூடிய அரசியல் கட்சி மீட்டிங் நடந்திருக்காது. ஏனென்றால் அந்த அம்மா அந்த சம்பவம் நடந்த அந்த ஏரியா பார்டரை விட்டு தாண்ட விட்டிருக்க மாட்டாங்க. ஏனென்றால் அவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். விஜய்யை உள்ளே தூக்கி வச்சு நுங்கு நுங்கு என நொங்கி இருப்பார். திமுக அமைப்பு என்பதால்தான் இன்று திரும்பத் திரும்ப விஜயையும் அவருடைய கட்சியினரையும் பேசவிட்டு அமைதியாக இருந்து அழகு பார்க்கிறார்களே தவிர தொடர்ச்சியாக திமுக கட்சியும் தமிழ்நாடு அரசும் ரவுடி போல செயல்பட்டு இருந்தார்கள் என்றால் ஒரு ரவுடி கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் நீலாங்கரையில் ஒரு மர்மமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்திருக்க மாட்டார் விஜய்.
அந்த மர்மங்களை உடைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி இருப்பார்கள். தமிழக வெற்றி கழகம் செய்த ரவுடிசம் தான் கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம். களத்தில் நின்று மக்களை காப்பாற்றுபவர்களை நிஜ ஹீரோ. கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் கட்சியில் அனைவருமே ஓடி ஒளிந்து கொண்டனர். மக்களுக்காக புரட்சிகரமான போராட்டம் நடத்திய விஜய் சிறைச்செல்ல தயாரா என்று வீரலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…