தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கோட். இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திரிஷாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி கலக்கி இருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் கோட் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என கூறப்பட்ட நிலையில் அதை விட குறைவாக தான் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். ஆனால் 200 கோடி என்பது சந்தேகம்தான் பல திரையரங்குகளில் கோட் படத்தை தூக்கிட்டாங்க.
இன்னும் சில திரையரங்குகளில் கூட்டம் வராததால் show break பண்ணிட்டாங்க. ஒரு மிகப்பெரிய ஹீரோவின் படத்தை இப்படி செய்வது என்பது மிகப்பெரிய அவமானம். பல திரையரங்குகளில் அட்வான்ஸ் தொகையை படக்குழு வாங்கி விட்டதால் அதனை ஈடுகட்ட இன்னும் ஒரு சில திரையரங்குகளில் கோட் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை. லியோ படத்துடன் ஒப்பிடும்போது கோட் திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…